மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 11:52 am
pm-modi-set-to-visit-maldives-for-solih-s-swearing-in-reset-ties

மாலத்தீவு நாட்டின் புதிய அதிபர் இப்ராஹிம் இபு சோலிஹின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் மாலத்தீவுக்கு செல்ல இருக்கிறார்.

தெற்காசிய நாடான மாலத்தீவு, சீனாவின் ஆதரவை பெற்று வருவதனால் இந்தியாவுடனான அந்நாட்டின் நட்புறவு குறைவாகவே இருந்தது. இந்நிலையில், சமீபத்தில், அந்நாட்டில்  நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், இப்ராஹிம் சோலிஹ் வெற்றி பெற்றார். அவருக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழா அடுத்த வாரம் நடக்க இருக்கிறது.  இந்த விழாவில் பங்கேற்கும்படி, பிரதமர் மோடிக்கு சோலிஹ் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்நிலையில், பிரதமர் மோடி அடுத்த வாரம் மாலத்தீவு செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தாலும் இதுவரை அவர் மாலத்தீவுக்கு சென்றதில்லை. எனவே முதல்முறையாக அவர் மாலத்தீவு செல்ல இருப்பதையொட்டி, அவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய, பிரதமர் அலுவலக அதிகாரிகள் மாலே நகருக்கு சென்றுள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close