நீரவ் மோடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 11:57 am
nirav-modi-declared-as-proclaimed-offender

சுங்கவரி முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றில், தொழிலதிபர் நீரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக, குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தின் சார்பில் நாளிதழ்களில் இன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுத்துறைகளுக்கு இந்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடான வழிகளில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக, குஜராத்தைச் சேர்ந்த தங்கம் மற்றும் வைர தொழிலதிபர் நீரவ் மோடிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடினார். இதற்கு முன்னதாக, வேறு வழக்குகளிலும் நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, சுங்கவரி முறைகேடு புகார் தொடர்பாக,நீரவ் மோடிக்கு எதிராகவும், அவரது பையர்ஸ்டார் நிறுவனத்துக்கு எதிராகவும், சூரத் நீதிமன்றத்தில், சுங்கவரித்துறையின் உதவி ஆணையர் ஆர்.கே.திவாரி கடந்த மார்ச் மாதம் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், நீரவ் மோடி ஆஜராகவில்லை. இந்நிலையில், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் பொது அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதனால், வழக்கில் முன்ஜாமீன் பெறும் சட்டவாய்ப்பு நீரவ் மோடிக்கு இனி கிடைக்காது. மேலும், வரும் 15ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் ஆஜராகாத பட்சத்தில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது காவல்துறையின் பொறுப்பாகும்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close