சபரிமலையை நோக்கி ரத யாத்திரையை தொடங்கி வைத்தார் எடியூரப்பா

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 12:29 pm
karnataka-bjp-starts-ratha-yatra-towards-sabarimalai

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பக்தர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, சபரிமலையை நோக்கிய ரத யாத்திரையை கர்நாடக பா.ஜ.க. தொடங்கியுள்ளது. இதை மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தின் மாத்தூரில் இருந்து இன்று தொடங்கியுள்ள இந்த ரத யாத்திரை, வரும் 30ம் தேதி சபரிமலையை சென்றடையவுள்ளது. முன்னதாக, பேசிய எடியூரப்பா உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், பெண்களுக்கு நமது கலாசாரம் எப்போதுமே முக்கியத்துவம் அளித்து வருவதுடன், அவர்களை மரியாதையுடனும் நடத்தி வருகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு முறையாக கையாளாமல் போனதால், தற்போது மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 90 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள், பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து போராடி வருகின்றனர். ஆகவே, கேரள முதல்வர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உச்சநீதிமன்றத்தையும் அணுக வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. ஆனால், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று எடியூரப்பா பேசினார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close