அத்வானிக்கு பிறந்தநாள்: நேரில் வாழ்த்து கூறிய மோடி

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 12:26 pm
pm-modi-greets-advani-on-his-birthday-today

பா.ஜ.க. மூத்த தலைவரும், எம்.பி.யுமான அத்வானியின் 91வது பிறந்தநாளையொட்டி, அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசத்துக்கு அவர் அளித்த பங்களிப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில், கடந்த 1927ம் ஆண்டில் இதே நாளில் பிறந்தவர் அத்வானி. பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் அவரது குடும்பம் இந்தியாவில் குடியேறியது. இந்நிலையில், இன்று 91வது பிறந்தநாளைக் கொண்டாடும் அத்வானிக்கு மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, டுவிட்டரில் மோடி வெளியிட்ட பதிவு:

”இந்தியாவின் வளர்ச்சிக்காக அத்வானி அளித்த பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் உடையது. மத்திய அமைச்சராக அவர் பதவி வகித்தபோது, நவீனத்தும் வாய்ந்த கொள்கை முடிவுகளையும், மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளையும் ஏற்படுத்தியதற்காக பாராட்டப்பட்டவர். அவரது மதிநுட்பத்தால் அரசியல் உலகையே ஈர்த்தவர். சுயநலமின்றியும், விடா முயற்சியுடனும் பா.ஜ.க.வை கட்டமைத்தவர். தொண்டர்களை மிக அற்புதமாக அவர் தயார்படுத்தியிருக்கிறார் என்று கூறியுள்ளார்’’ மோடி.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close