குழந்தையின் வாயில் வெடி வைத்த படுபாதகன்

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 01:10 pm
up-youth-put-firecracker-in-girl-child-s-mouth

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் அருகே இளைஞர் ஒருவர், 3 வயது பெண் குழந்தையின் வாயில் அணுகுண்டை வைத்து வெடித்துள்ளார். அந்தக் குழந்தை, மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

மீரட் அருகேயுள்ள மிலக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷஷி குமார். இவரது மூன்று வயது பெண் குழந்தை, கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று வீட்டுக்கு வெளியே விளையாட்டிக் கொண்டிருந்தது. அப்போது, ஹர்பால் என்ற இளைஞர், குழந்தையின் வாயில் அணுகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாகத் தெரிகிறது. 

வாயில் வெடி வெடித்ததில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு 51 தையல்கள் போடப்பட்டுள்ளன.  அதேசமயம், குரல்வளை பகுதியில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தலைமறைவான அந்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close