பணமதிப்பிழப்பு நடவடிக்கை: அருண் ஜெட்லி விளக்கம்

  டேவிட்   | Last Modified : 08 Nov, 2018 04:31 pm

arun-jaitley-about-denomination

பண மதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எதனால்? என விளக்கம் அளித்து அருண் ஜெட்லி தனது  பேஸ்புக் பக்கத்தில், “பண மதிப்பிழப்பின் நோக்கம் பணத்தை கைப்பற்றுவது  இல்லை எனவும், முறையான பொருளாதாரத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்திலேயே பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டது எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், ஒட்டு மொத்த பணமும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக, தவறான தகவல்களை கொண்ட விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருவதாகவம் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை அரசு முதலில் குறி வைத்து, இதை செயல்படுத்த தவறியவர்கள் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விவரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்தது. இதன் விளைவாக விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிந்தது எனவும் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ”2018-19 நிதியாண்டில் தனிநபர் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 20.2 சதவீதம் அதிகரித்தது. கார்பரேட் வரி வருவாயும் 19.5 சதவீதம் அதிகரித்தது. நேரடி வரி வசூல்  6.6 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என முறையே அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்தியாவால் உருவாக்கப்பட்ட யுபிஐ, ருபே ஆகியவற்றால், விசா, மாஸ்டர் கார்டு போன்றவை இந்தியாவில் மார்கெட் பங்குகளை இழக்கத்தொடங்கியது” என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.