உருவாகுமா அயோத்தியில் அமைதி கோயில் ?

  பாரதி பித்தன்   | Last Modified : 09 Nov, 2018 07:13 am
ram-temple-at-ayodhya

காங்கிரஸ், இந்து மதம், ராமர் ஆகியவை இந்தியாவை ஒன்றாக இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உச்சரிப்பு வேறுபாடு கொண்ட ஒரே பெயர் ராமர் மட்டும் தான். அந்த ராமன் பிறந்த மண்ணில் அவனுக்கு கோயில் கட்டத்தான் எத்தனை நூற்றாண்டுகள் போராட வேண்டியிருக்கிறது. ராமர் கோயில் கட்டுவதற்கு பக்தி மட்டும் தான் காரணம் என்றால் உள்ளமே கோயில் ஊன் உடம்பே ஆரயம் என்று நினைக்கின்ற இந்து எந்த இடத்திலும் அதை கட்டுவான். அவன் வணங்கும் இறைவனும் இந்த இடத்தில் தான் இருப்பேன் என அடம்பிடிக்கமாட்டார்.  பிடிச்சா பிளையார் பிடிக்காட்டா விட்டால் சாணி. ஆனால் ராமர் கோயில் என்பது இந்த நாட்டின் கவுரவம்.அடிமை ஜததளத்தில் இருந்து வெளியேறி விட்டோம் என்று ஓங்கி உலகிற்கு சொல்லும் தகவல். இதை உணர்ந்து கொள்ள .வேண்டும் என்றால் ராமர் கோயிலின் உண்மை வரலாற்றை உணர்ந்து கொள்வது அவசியம். 

ராமன் இந்நாட்டின் இலட்சிய புருஷன். அவனே இந்த நாட்டின் காவலன், அவன் புகழை பரப்பும் வகையில் 89 கறுப்பு நிற கல்துாண்கள் மீது கடந்த 2100 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் விக்கிரமாதித்யன் சரயு நதிக்கரையில் மிகப் பெரிய கோயில் எழுப்புகிறான். பின்னர் சரயு நதியில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் காரணமாக அவ்வப்போது ராமர்கோயில் புதுபிக்கப்படுகிறது. பாபர் காலத்தில் இடிக்கப்பட்ட ராமர்கோயில் கார்வால் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என வல்லுனர்கள் கூறுகின்றனர். அந்த ராமர் கோயிலைத்தான் இந்த நாட்டின் மீது படை பெயடுத்த பாபரின் போர்ப்படை தளபதி மீர்பாகி 1528ம் ஆண்டு இடித்ததள்ளுக்கிறான். இதை தடுத்து இந்தக்கள் ஆவேசமாக போர் புரிகின்றனர். இந்த போர் 15 நாட்கள் நடக்கிறது. இதில் 1லட்சத்து 76 ஆயிரம் இந்துக்கள் பலியாகிறார்கள்.

இந்த இழப்புக்கு பின்னர் கூட வலுக்கட்டாயமாக கோயில் பாதி இடிக்கப்பட்டு மசூதி போன்று வெளிப்புறம் மாற்றப்படுகிறது. கடந்த 1528 முதல் 1949வரை ராமர் கோயிலை மீட்க 76 போர்கள் நடந்தன. குருகோவிந்த சிங், மகாராணி ரான்குன்வர் உட்பட பலர் இந்த போராட்டங்களை தலையேற்று நடத்தினர்.

பிரதமராக நேரு இருந்த காலத்தில்  1949ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அந்த கோயிலில் பாலராமன் உருவம் சுயம்புவாக தோன்றியது.

இதைத் தொடர்ந்து ஏற்றபட்ட சட்டம் ஒழுங்கை பராமாரிக்க ஸ்ரீபிரியாதத் ராம் கோயிலின் பொறுப்பாளராக நியமிக்கபட்டார். அவர் கோயிலின் கதவை பூட்டஉத்தரவிட்டார். அர்ச்சகர் மட்டும் சென்று வர ஒரு சிறு வழி ஏற்படுத்தப்பட்டது. .பூட்டிய கதவிற்கு வெளியே பக்தர்கள் நாமசங்கீர்தனம் பாடிவந்தனர்

இதைத் தொடர்ந்து கோயிலை திறக்க சொல்லி பல ஆண்டுகள் போராட்டம்


1983ம் ஆண்டு மார்ச் மாதம் உபியில் துறவிகள் மாநாடு நடந்தது. இதில் மேற்கு உபியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் தாவ் தயாள் கண்ணா என்பவர் அயோத்தி, மதுரா, காசி தளங்களை மீட்க அறைகூவல் விடுத்தார்.

இது போன்று ராமன் என்று பெயர் ஒலித்த இடங்களில் எல்லாம் அயோத்தியின் நிலை உறுத்திக் கொண்டே இருந்தது.

 சாதுக்கள் மட்டும் ஈடுபட்ட இந்த போராட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் களம் இறங்கியது. 1984ம் ஆண்டு அனைத்து பிரிவு இந்து சன்யாசிகளையும் ஒருங்கிணைத்து அயோத்திய பற்றி ஆலோசனை கூட்டத்தை விஎச்பி ஏற்பாடு செய்தது. அதில் முதலில் ராமர் கோயிலை மீட்போம், பின்னர்  நாடுமுழுவதும் அயோத்தி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கோயில் கதவை திறப்போம் என முடிவு செய்யப்பட்டது.

அதன் பேரில் விஎச்பி சார்பில் ராமர் ஜானகி ரதயாத்திரையை பீகார் மாநிலத்தில் சீதாமார்ஹியில் தொடங்கி அயோத்தி வழியாக டில்லிக்கு செல்லும் வகையில் தொங்கப்பட்டது. ஆனால் இந்த யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. ஓராண்டு கழித்து யாத்திரை கோயிலின் பூட்டை திறக்க வலியுறுத்தி மீண்டும் தொடர்ந்தது. இதில் ஏற்பட்ட எழுச்சிகாரணமாக பைசராபாத் மாவட்ட நீதிபதி 1–2–1986ம் ஆண்டு கோயிலின் பூட்டை திறக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராமர் கோயிலின் மாதிரி உருவானது. பின்னர் 1989ம் ஆண்டு பிரயாகையில் நடந்த கும்பமேளாவின் போது விஎச்பி அமைப்பு ஏற்பாடு செய்த சாதுக்கள் மாநாட்டில்  நாட்டின் அனைத்து கோயில்களிலும் ராமர் வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டு செய்யப்பட்டது.உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து ஸ்ரீராமர் நாமம் எழுதப்பட்ட 275,000 .செங்கல்கள் 6 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்டு 1989ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் அயோத்தி வந்து சேர்ந்தது. 1989 நவம்பர் 9ம் தேதி பீகாரை சேர்ந்த தலீத் சகோரரகள் காமேஸ்வர் சவ்பால் அடிக்கல் நாட்டினார். இதற்கு அப்போதைய காங்கிரஸ்கட்சியின் ஆட்சியில் முதல்வராக இருந்த திவாரி அனுமதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி சாதுக்கள் கரசேவைக்கு அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை அனைத்து இந்துக்களும் பெறும் வகையில் ஒவ்வொரு இல்லம் தோறும் ராம ஜோதி சென்றது. அந்த ஜோதியைக் கொண்டு அந்த ஆண்டு அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். 25–19–1990ம் ஆண்டு பாஜ தலைவர் அத்வானி ராமர் ரதயாத்திரையில் வளம் வந்து மக்களிடம் ஆதரவு திட்டினார். அதன் அடிப்படையில் மீண்டும் கரசேவைக்கு சாதுக்கள் அழைப்பு விடுத்தனர்.

சாதுக்களில் அழைப்பின் படி லட்சக்கணக்கான கரசேவகர்கள் 30–10–1990ம் ஆண்டு அயோத்தியில் உள்ளே புகுந்தனர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அப்போதைய உபி முதல்வர் முலாம்சிங் யாதவ் உத்தரவிட்டார். இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை இது வரையில் தெரியவில்லை. பலரின் உடல்கள் வனப்பகுதிகளிலும், ஆறுகளிலும் இழுவிடப்பட்டு மறைக்கப்பட்டன. அதையும் மீறி சில கரசேவகர்கள் பாபர் மசூதியின் உச்சியில் ஏறி காவிக் கொடியை பறக்கவிட்டனர்.

அதன்பின்னர் ராமர் பாதுகை நாடுமுழுவதும் வலம் வந்தது. இதே  காலகட்டத்தில் மீண்டும் கரசேவைக்கு அழைப்பு வரவே 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்கள் அங்கிருந்த சர்ச்சைக்குரிய கட்டத்தை இடித்து, தற்காலிக வழிபாட்டிற்கான ஏற்பாட்டை செய்தனர். அன்றுடன் பாபர் மசூதி விவகாரம் முடிவுக்கு வந்தது. ராமர் சிலையை பாதுகாக்க வேண்டும் என்று 67 ஏக்கர் நிலத்தை நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு கையப்படுத்தியது.

அதன் பின்னர் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு இன்றுவரை தொடர்கிறது.

அந்த இடத்தில் கோயில் இருந்தற்கான வரலாறு, தொல்லியல் துறை என்று பல விதமான ஆதாரங்கள் உள்ளன. மேலும் மீர்பாகி அங்கு இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்துவற்காக மசூதி கட்ட வில்லை. இந்த நாட்டின் இலட்சியபுருஷனாக இருக்கும் ராமன் கோயிலை இடித்துவிட்டு பாபா் மசூதி கட்டி உள்ளேன் என்று மார்த்தடிக் கொள்ளவே இது உருவானது. அதுவும் இடிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது மீண்டும் கட்டப்பட்டாலும் அது மோடி , சோனியா, ஆதித்யநாத் ஆகியோர் கட்டியதாக வேண்டுமானாலும் கணக்கு காட்டலாம். ஆனால் பாபர் மசூதியாக உருவெடுக்காது. 

...தொடரும்...

 

- பாரதி பித்தன்
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close