பாஜக எதையும் சாதிக்கவில்லை- மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Nov, 2018 05:22 pm
p-chidambaram-press-meet

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்  பாரதிய ஜனதா கட்சி எதையும் சாதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம்,  “பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. மாறாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்தனர் ,தொழில்துறை பலவீனமடைந்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாரதிய ஜனதா கட்சி எதையும் சாதிக்கவில்லை. மோடி தலைமையிலான அரசு தோல்வியை அடைந்துவிட்டது. ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வந்தால் அரசியலமைப்புக்கு விரோதமானது. இதனிடையே  மாநில அளவில் கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் கூட்டணி பற்றி அகில இந்திய காங்கிரஸ் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close