தீபாவளி போனஸ் இல்லை; ஏர் இந்தியா அதிகாரிகள் ஸ்ட்ரைக்

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 07:52 pm
no-diwali-bonus-air-india-staff-go-on-strike

தீபாவளி போனஸ் வராத காரணத்தால், ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 13 ஏர் இந்தியா விமானங்கள்  தாமதமாகியுள்ளன. 

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஏர் இந்தியா போக்குவரத்து சேவைகள் துறை (AIATSL), விமான நிலையங்களில் அந்நிறுவனத்தின் சேவைகளை பார்த்துக்கொள்கிறது. இதில் சுமார் 5000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு பேசப்பட்ட தீபாவளி போனஸ் தரப்படாததால், AIATSL ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சில AIATSL அதிகாரிகள் தீபாவளி போனஸ் பிரச்னையை முன்வைத்து இரு தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஒப்பந்த ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது" என ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பிரச்னையால், 10 உள்நாட்டு விமானங்களும், 3 சர்வதேச விமானங்களும்,  3 மணி நேரங்களுக்கு மேல் தாமதமானது. தங்களது நிரந்தர ஊழியர்களை வைத்து, பற்றாக்குறையை ஏர் இந்தியா சரி செய்து வருகிறதாம். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close