ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் கூட்டு சேர வேண்டும்: சந்திரபாபு நாயுடு

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 02:40 am
opposition-unite-to-save-democracy-chandrababu-naidu

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் கைகோர்க்க வேண்டும் என்றும், சிபிஐ, ஆர்.பி.ஐ போன்ற அமைப்புகளை மத்திய அரசு அழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த சில தினங்களில், தொடர்ந்து எதிர்கட்சிகளை சந்தித்து, வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு எதிராக கூட்டணிக்கு பலம் சேர்த்து வருகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடந்த வாரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நாயுடு, பெங்களூரில், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவ கவுடா, மற்றும் அவரது மகன், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரை சந்தித்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தை காப்பாற்ற, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர வேண்டும் என்று கூறினார். "தேசத்தை காப்பாற்ற, ஜனநாயகத்தை காப்பாற்ற, அனைவரும் சேர்ந்து கைகோர்த்துள்ளோம். எல்லா அமைப்புகளும் அழிக்கப்படுகின்றன. நாட்டின் தலைமை புலனாய்வு நிறுவனமான சிபிஐ, பெரும் சர்ச்சையில் உள்ளது. ரிசர்வ் வங்கியை கூட விட்டுவைக்கவில்லை" என்றார் நாயுடு.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close