பிரதமர் மோடியை அடுத்த வாரம் சந்திக்கிறார் அமெரிக்க துணை அதிபர்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 09:38 am
us-vice-president-to-meet-pm-narendra-modi-next-week

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், அடுத்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பப்பூவா கினியா ஆகிய 4 நாடுகளுக்கான பயணத்தை, மைக் பென்ஸ், வரும் 11 முதல் 18ம் தேதி வரையில் மேற்கொள்கிறார். சிங்கப்பூரில் நடைபெறும் அமெரிக்க - ஆசிய நாடுகளின் மாநாட்டிலும், கிழக்கு ஆசியாவின் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார். எப்போதும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வதே வழக்கம் என்ற போதிலும், இந்த முறை டிரம்ப் கேட்டுக் கொண்டதால் துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்துகொள்ள உள்ளார். அதேசமயம், இந்த மாநாட்டில் பங்கேற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்களையும் மைக் பென்ஸ் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பப்பூவா கினியாவில் நடைபெறும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் கலந்து கொள்ளவுள்ளார். முன்னதாக, அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷியாவிடம் டிரையம்ப் ஏவுகணை வாங்குவதற்கும், ஈரானிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கும் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்தச் சூழலில், அமெரிக்க துணை அதிபர், இந்தியப் பிரதமரை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close