காஷ்மீர்: ரூ.250 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 10:21 am
kashmir-rs-250-crore-worth-heroin-seized

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு அருகே ஆப்பிள் பழங்களை எடுத்துச் செல்லும் பெட்டியில் வைத்து கடத்தப்பட்ட 50 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.250 கோடியாகும். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் கூறியதாவது:

ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனர். உதம்பூரில் இருந்து கிளம்பிய லாரி ஒன்றை பின்தொடர்ந்து வந்த அதிகாரிகள், அதனை நக்ரோட்டா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் இடைமறித்து ஆய்வு செய்தனர். அப்போது ஆப்பிள் பழப் பெட்டிகளுக்கு இடையே 50 பொட்டலங்களில் கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சர்வதேசச் சந்தையில் அதன் மதிப்பு ரூ.250 கோடியாகும்.

இந்தக் கடத்தல் தொடர்பாக குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஜம்மு பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ரூ.800 மதிப்புள்ள 161 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு கடத்தப்படுவது தெரியவந்துள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close