பாய் தனூஜ் - சகோதர-சகோதரிகள் தினம் - பிரதமர் மோடி வாழ்த்து

  டேவிட்   | Last Modified : 09 Nov, 2018 11:14 am
modi-greets-nation-on-bhai-dooj

சகோதர, சகோதரிகளின் தினமான இன்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நிகழாண்டில் நவம்பர் 9ஆம் தேதி (இன்று) சகோதர, சகோதரிகளின் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சகோதர, சகோதரிகள் அன்பளிப்புகளை பகிர்ந்து கொண்டாடுவர். ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறுபடும். முழு நிலவு தோன்றம் நாளில் இது அனுசரிக்கப்படுகிறது. 

பாய் தனூஜ் என்று அழைக்கப்படும் சகோதர, சகோதரிகளின் தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில், ஒவ்வொருவரும் சகோதர, சகோதரிக்கும் இடையே உள்ள உறவு பலப்பட வேண்டும் என்றும், நாட்டில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயேல், ரவிசங்கர், ஸ்மிரிதி, காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் தங்களைது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close