தாலிபான்களுடன் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 12:06 pm
india-to-attend-peace-talks-with-taliban

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக தாலிபான் தீவிரவாதிகளுடன் இன்று நடத்தப்படவுள்ள சர்வதேசப் பேச்சுவார்த்தையில், அதிகாரப்பூர்வமற்ற வகையில் பங்கேற்க இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் அமர் சின்ஹா, பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர் டி.சி.ஏ.ராகவன் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ நகரில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தாலிபான்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவது குறித்த இந்தக் கூட்டத்தில் அந்த இரு தரப்பினரின் பிரதிநிதிகள் மற்றும் 12 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகள்  கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். தாலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா முதல்முறையாக கலந்துகொள்ளவுள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில்,”ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை தொடங்குவது தொடர்பான அனைத்து வித முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும். அங்கு ஒற்றுமை, பன்முகத்தன்மை, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் அரசு சொந்தமாக, அதன் கட்டுப்பாட்டில் எடுப்பவையாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலையான கொள்கை. மாஸ்கோ கூட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு என்பது அதிகாரப்பூர்வமற்ற வகையில் இருக்கும்’’ என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close