கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்கான ஊழல் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் கடும் விமர்சனம்!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 04:54 pm
demonetisation-is-scam-to-convert-black-money-to-white-congress

மத்திய பா.ஜ.க அரசால் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்கான ஊழல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

90 சட்டமன்ற தொகுதிகளை சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 12, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ளதால் அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று காலை 11 மணியளவில் ராய்ப்பூருக்கு வந்த அவர், அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் கங்கர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து வீதியில் சென்று வாக்கு சேகரிக்கிறார்.

அப்போது அவர் பேசுகையில், "மத்திய பாஜக அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது எதற்காக தெரியுமா? கருப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றுவதற்கான ஊழல்.

நீங்கள் பணமதிப்பிழப்பின் போது நீண்ட வரிசையில் ஏ.டி.எம் வாசலில் காத்திருந்தீர்கள், அப்போது எதாவது ஒரு கருப்பு பணம் வைத்திருந்தவர்களை பார்த்தீர்களா?, ஆனால் அந்த சமயத்தில் தான் நிரவ்மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி உள்ளிட்டோர் உங்களின் பணத்தை எடுத்துகொண்டு வெளிநாடு சென்றுவிட்டனர்" என்று காரசாரமாக பேசியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close