அர்பன் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 05:16 pm
pm-modi-questions-congress-support-for

அர்பன் மாவோயிஸ்டுகளை காங்கிரஸ் ஏன் தொடர்ந்து ஆதரித்து வருகிறது? என பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை தாக்கியுள்ளார்.

90 சட்டமன்ற தொகுதிகளை சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 12, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், அங்கு அனல்பறக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று ஜட்கல்பூர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், "அர்பன் மாவோயிஸ்டுகள் ஏசியுடன் கூடிய காரில் தான் வலம் வருகின்றனர் மற்றும் அவர்களது குழந்தைகள் வெளிநாடுகளில் படிக்கின்றனர். இதனால் ஆதிவாசி இளைஞர்களின் வாழ்க்கை தான் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆதிவாசிகளை மாவோயிஸ்டுகளாக மாற்றி அவர்களை நகரங்களில் இருந்தபடி ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அர்பன் மாவோயிஸ்டுகளை ஆதரித்து வருகிறது. நக்சல் கொள்கைக்கு எதிராக அக்கட்சி தலைவர்கள் பேச தயங்குகின்றனர். 
அது ஏன் என்று தான் தெரியவில்லை" என்றார். 

மேலும், " வாஜ்பாயின் கனவான, வளமையான சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்றும் கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close