அஸ்ஸாம் - 9 நாளில் 16 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 09:49 am
assam-16-infants-died-in-9-days-probe-ordered

அஸ்ஸாம் மாநிலம், ஜோர்ஹத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி நேற்று வரையிலான 9 நாள்களில் 16 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்,  “உலக சுகாதார அமைப்பான யுனிசெஃப் உறுப்பினர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்ட விசாரணைக் குழு, கௌஹாத்தியில் இருந்து  ஜோர்ஹத் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தனது முதல்கட்ட அறிக்கையை இன்று வெளியிடும்’’ என்றார்.

மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளே உயிரிழந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் சௌரவ் போர்காகோடி தெரிவித்தார். எனினும், சிகிச்சை குறைபாடு காரணமாக உயிரிழப்பு ஏற்படவில்லை என்றார் அவர்.

தாய்மார்கள் நீண்ட நேரம் வேலை செய்யும் தொழிலாளியாக இருப்பது, குழந்தையின் எடை குறைவு போன்ற காரணங்களாலும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும், இதுதொடர்பாக விசாரிக்க மருத்துவமனை சார்பிலும் 6 நபர்கள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சௌரவ் தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close