காஷ்மீர் துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2018 08:46 am
jammu-and-kashmir-two-terrorists-killed-in-pulwama-encounter

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

காஷ்மீர் எல்லையில் தீவிரவாத தாக்குதல் என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. வலிமைமிக்க நமது இந்திய ராணுவத்தினரும் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று காஷ்மீர் புல்வாமா பகுதியில், தீவிரவாதிகள் உள்நுழைந்து, இந்திய ராணுவத்தினர் மற்றும் போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசினர். பதிலுக்கு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களும், வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தாக்குதல் நடைபெற்றதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close