சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 10:17 am
pm-modi-to-go-singapore-on-november-14

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, வரும் 14ம் தேதி சிங்கப்பூர் செல்லவுள்ளார். அரசியல், பாதுகாப்பு, வர்த்தக விவகாரங்கள் உள்ளிட்டவற்றை ஆலோசிக்கும் கிழக்கு ஆசிய மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் இத்தகவலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”13வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சிங்கப்பூர் செல்லவுள்ளார். அதையொட்டி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அங்கு நடைபெறும் வேறுபல நிகழ்ச்சிகளிலும் மோடி பங்கேற்பார்’’ என்றார்.

ஆசியான் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மலேசியா, வியத்நாம், மியான்மர், கம்போடியா, புருணே, லாவோஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளும், அவற்றுடன் சேர்த்து இந்தியா, சீனா, ஜப்பான், கொரிய குடியரசு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளன. முன்னதாக, இந்த மாநாட்டிற்கு வரும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அந்நாட்டு அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close