சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு மாதங்களுக்கு நடைபெறும் மகரவிளக்கு மணடல பூஜைக்காக இந்த மாத இறுதியில் நடை திறக்கப்படவுள்ள நிலையில், கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக 10 முதல் 50 வயது வரையிலான இளம்பெண்கள் 550 பேர் இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த மாதமும், கடந்த 5ம் தேதியும் வழக்கமான மாதாந்திர பூஜைக்காக கோயில் திறக்கப்பட்டபோது இளம்பெண்கள் சிலர் கோயிலுக்கு செல்ல முற்பட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இதுவரையில் எந்தவொரு இளம்பெண்ணும் சன்னிதானத்துக்குள் நுழைய இயலவில்லை.
இதற்கிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீது, வருகின்ற செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. அதேசமயம், மண்டல பூஜைக்கு வழிபாடு நடத்துவதற்கான இணையதள முன்பதிவும் தொடங்கியுள்ளது. அதில், இதுவரையில் 3.5 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, 10 முதல் 50 வயதிலான 550 இளம்பெண்கள் சபரிமலை செல்வதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
newstm.in