சத்தீஸ்கரில் தொடர்ந்து நான்காவது முறையும் பா.ஜ.க வெற்றி பெறும்: அமித் ஷா

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 02:36 pm
chhattisgarh-almost-free-of-naxalism-amit-shah

சத்தீஸ்கரில் தொடர்ந்து நான்காவது முறையும் பா.ஜ.க ஆட்சியமைக்கும் என தேசிய பாஜக தலைவர் அமித் ஷா அம்மாநிலத்தில் இன்று நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல்  நாளை மறுநாள்(நவ.12) அன்று நடைபெறுகிறது. இதனால் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. மீதமுள்ள 72 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. 

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் கடைசி நாள் என்பதால், தேர்தல் பிரச்சாரம் அங்கு அனல் பறக்கிறது. பா.ஜ.கவின் ரமண் சிங் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்து வரும் நிலையில், இந்த முறை நான்காவதாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 

நேற்று சத்தீஸ்கரில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல் அதிகமாக நடைபெறுவதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்றும், அவர்கள் தான் தொடர்ந்து நக்சல்களை ஆதரித்து வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். 

இன்று சத்தீஸ்கரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "தொடர்ந்து மூன்று முறை பா.ஜ.க ஆண்டதன் பலனாக சத்தீஸ்கரில் நக்சல்களின் தாக்குதல் குறைந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் நக்சல் தாக்குதல் இல்லை என்றே கூறலாம். மேலும் சத்தீஸ்கர் மாநிலம் மின்சாரம் மற்றும் சிமெண்ட் உற்பத்தியில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக இருந்த காங்கிரஸ், இம்மாநிலத்திற்கு என்ன செய்தது? ஆனால் ரமண் சிங் தலைமையிலான ஆட்சி மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளது. 

எனவே சத்தீஸ்கரில் முழுவதுமாக நக்சல்களின் ஆதிக்கம் ஒழியவும், தொடர்ந்து இம்மாநிலம் வளர்ச்சி பெறவும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். மீண்டும் 4வது முறையாக பாஜக சத்தீஸ்கரில் ஆட்சியமைக்கும்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close