நேர்மை நெருங்க வேண்டிய நேரம்

  பாரதி பித்தன்   | Last Modified : 10 Nov, 2018 02:34 pm

about-note-denomination

அரசியல் கட்சி மாநாட்டிற்கு ஒரு கொடி நட சுமார் 20 ரூபாய் செலவாகிறது.  நம் அரசியல் கட்சிகளுக்கு ஒருநாள் செலவை எவ்வளவு இருக்கும்? எனக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்கிறார் ஒரு சின்ன இயக்கத்தின் தலைவர் . கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள் தான் இவர்களின் அட்சய பாத்திரம். கறுப்பு பண முதலைகளுக்கு ஜாதி, அரசியல் என எந்த வித்தியாசமும் இல்லை. லஞ்சம், ஆபீஸ் செலவு, போன்றவை தான் அவர்களுக்கு தெரிந்தது எல்லாம். விளைவு ஒவ்வொருவரும் லட்சக்கணக்கில், கோடி கணக்கில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்து, விலைவாசி உட்பட அனைத்து விஷயங்களையும் உயர்த்திக் கொண்டே போனார்கள். நாமும் நல்லா திருடி விட்டார்கள் என்று திட்டுவதற்கு பதிலாக நல்லா சம்பாதித்து விட்டான் என்று பாராட்டி பிரமிக்க தொடங்கினோம்.

இவர்களுக்கு பேரிடியாகவிழுந்தது தான் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை. சுனாமி தாக்கிய சில மாதங்கள் கழித்து நாகை மீனவர் ஒருவர் முதல் நாள் இரவு 10 பேருக்கு சம்பளம் போட்டேன் சார், சுனாமி வந்தற்கு மறுநாள் கட்டிய வேட்டி சட்டை மட்டும் தான் இருந்தது ஒருவேளை சோற்றுக்கு வீதியில் வந்த வாகனத்தில் கையேந்தினேன் என்றார். இதற்கு சற்றும் குறைவில்லாதது   2016 மார்ச் 8ம் தேதி அன்று .மோடியின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கமும். 14.18 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ஒரே இரவில் செல்லாது என்றால் இதை பொருளாதார சுனாமி என்று கூறாமல் என்ன கூறுவது. இதில் 99.3 சதவீதம் ரூபாய்கள் திரும்பி வங்கிக்கே வந்து விட்டது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. வெறும் 0.7 சதவீத கறுப்பு பணத்தை கைப்பற்றத்தான் பிரதமர் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டுமா  என்ற கேள்வி எழுப்பபடுகிறது.

இந்த அளவிற்கு வங்கிக்கு பணம் திரும்பி வந்த வழிமுறையை பார்த்தால் திட்டத்தின் அமலாக்கம் எங்கே தோல்வி அடைந்தது என தெரியும். கூலிக்கு பணம் மாற்றியது, வங்கியாளர்கள் கறுப்பு பணத்தை மாற்ற உதவியது. போலி நிறுவனங்கள் மூலம் டெபாசிட் செய்தது, ஊழியர்கள் கணக்கில் பணம் போட வைத்து வாங்கியது என பல திரைமறைவு நடவடிக்கை தான் இந்த அளவிற்கு பணத்தை ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் கொண்டு வந்தது. ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்காவிட்டால் இது போன்ற நிலையே ஏற்பட்டிருக்காது.

இந்தியாவை பல ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய இது போன்ற நடவடிக்கைகளை எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வரும் போது தான் செய்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1946ம் ஆண்டு 1,000, 5000,10000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1978ம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சியில் இது போல அறிவிக்கப்பட்டது. இதற்கு வரி ஏய்ப்பை தடுக்கவும், கறுப்பு பணத்தை ஒழிக்கவும் தான் இது போல அறிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. இந்த இரண்டு முறையும் பணக்கார்கள் மட்டும் பாதிக்கப்பட்டனர். ஆனால் .மோடி அறிவித்த போது அனைத்து தரப்பினரும் பாதிக்க ஏடிஎம் இயந்திரங்களும் ஒருவிதத்தில்காரணமாக மாறியது. ஏடிஎம்மில் 600 ரூபாய் எடுத்தால் கூட ஒரு 500 ரூபாய்  ரூ. 100 என 2 நோட்டுகள் தான் கிடைக்கும். அதனால் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டாக இருந்தாலும் அனைவரின் கைளிலும் புழங்கியது. 

மேலும் ஏடிஎமில் ஒருநாளைக்கு 2000, ஒரு வாரத்தில் வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் என வரம்பு மாற்றப்பபட்டதும், தீவிரவாதத்திற்கு பணம் பறமாற்றம் செய்வது தடுக்கப்பட்டது.

மோடி 100 நாள் தாருங்கள் எனக்கேட்டார், ஆனால் அதைவிட கூடுதாலக மேலும் 100 நாட்கள் அப்பாவி பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஒரு சிலர் இந்த காலகட்டத்தில் உயிர் துறந்தவர்களும் உள்ளனர். திருமணம் செய்வதில் சிக்கலை சந்தித்தவர்களும் உள்ளனர். அனைத்து விதமான சிரமமும் இந்த காலகட்டத்தில் இருந்தது. இவை எல்லாமல் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அ.னைவரும் பொறுமை காத்தனர். ஆனால் இன்று வரை கத்திக் கொண்டிருப்பர்களை பார்த்தால் நீங்கள் இவ்வளவு இழந்து இருக்கீறீர்களாக என்று தான் எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் கால தொண்டனின் டீ செலவுக்கு சில கோடிகள் வசூலித்த ஸ்டாலின், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அலைந்து கொண்டிருக்கும் சிதம்பரம், ராகுல், நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சிக்கி கொண்டிருக்கும் சோனியா, ராகுல், சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா போன்றவர்கள் மோடியின் இந்த நடவடிக்கை விமர்சனம் செய்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் கணக்கில் சோனியாவிற்கு கார் கூட இல்லை என கூறுவது மக்களை எவ்வளவு முட்டாளாக நினைக்கிறார்கள் என்று காட்டுகிறது. 

இயேசு கூறுவது போல உங்களில் தவறு செய்யாதவன் முதல் கல் எறியட்டும் என்றால் மோடியின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மீது குற்றம் சொல்ல ஆளே இருக்காது.

உண்மையில் இந்த நடவடிக்கையின் பின்புலம் என்ன? திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் பணத்தை மாற்றி கொடுத்த வகையில் சில நுாறு ரூபாய் கமிஷன் கிடைத்தது. நாட்டில் ஷெல் நிறுவனங்களின்  1.06 லட்சம் இயக்குனர்கள் கண்டறிப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பிறகு 35 ஆயிரம் நிறுவனங்களில் 7 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்திருப்பது கண்டறிப்பட்டுள்ளது. தற்போது பல நிறுவனகள் மீது வருமான வரித்துறை  விளக்க நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இப்படி பண மதிப்பு நீக்கத்திற்கு பின்னர் உள்ள நடவடிக்கைகள் கேன்சர் பாதிப்பு போல வெளியே தெரியாமல் உள்ளே அரித்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை மூடி மறைத்துக் கொண்டு சிரித்தபடி மோடிக்கு எதிராக கோஷம் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆதாயம் இல்லாமல் செந்தில் ஆத்தோட போக மாட்டார் என்ற பழமொழியை மட்டும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிரானவர்கள் மீது பொறுத்தி பாருங்கள். அதில் தேறுபவர்கள் கூறுவதை மட்டும் நம்பி இருங்கள். இல்லாவிட்டால் நம் கண்ணை நம்விரலால் குத்தி விடுவிடுவார்கள்.

- பாரதி பித்தன்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close