பிரதமர் மோடியின் சாதனை!  'ரூபே' கார்டு பயன்பாடு 50% ஆக அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 04:01 pm
rupay-now-captures-50-of-market-share-in-india

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 50 கோடி பேர் தற்போது  'ரூபே' கார்டு பயன்படுத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பணபரிமாற்றத்தில் 'ரூபே' கார்டு அதிகம் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வருகிறது. பிரதமர் மோடி கொண்டுவந்த ரூபே கார்டு பிரபலமாகி வருவதால் அமெரிக்காவின் மாஸ்டர், விசா கார்டு போன்ற நிறுவனங்கள் அடி வாங்கி வருகின்றன என அந்நாட்டு அதிபர் ட்ரம்பிடம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, இந்தியாவின் வளர்ச்சிக்காக, இந்திய தேசிய கட்டண நிறுவனத்தின் 'ரூபே' கார்டை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறி வந்தார். மத்திய அரசு தரப்பில் டிஜிட்டல் முறையிலான பிரவர்த்தனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிற நாட்டு கார்டுகளைக் காட்டிலும் 'ரூபே'-யை பயன்படுத்துபவர்களுக்கு கேஷ் பேக் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

எனவே 'ரூபே' கார்டு பயன்பாட்டினால், அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு நிறுவனம் வர்த்தக ரீதியில் அடிவாங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சகத்திடம் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் இதுகுறித்து புகார் அளித்துள்ளன.  'ரூபே' கார்டு திட்டத்தை மோடி பிரபலப்படுத்துவதால், தங்களது வர்த்தகம் பாதிக்கப்படுவதாக மாஸ்டர்கார்டு நிறுவனம் அமெரிக்க அரசிடம் கூறியிருக்கிறது. எனவே இதனை சரிசெய்யும் முயற்சியில் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. 

இந்நிலையில்  'ரூபே' கார்டினால் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து பாஜக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,  'ரூபே' கார்டு பயன்பாடு கடந்த 2013ல் 0.6%  ஆக இருந்துள்ளது. இது கடந்த 2015ல் 14% ஆக வளர்ச்சியடைந்த நிலையில், 2018ம் ஆண்டு 50% ஆக உயர்ந்துள்ளது. 

அதாவது இந்தியாவில் மக்கள் தொகை தோராயமாக 100 கோடி என்றால், அதில் 50 கோடி கார்டுகள் தற்போது  'ரூபே' கார்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close