சபரிமலையில் பெண்கள் சாமி தரிசனம் செய்ய ஹெலிகாப்டர்: கேரள அரசு

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 05:22 pm
560-woman-register-to-enter-flashpoint-indian-temple

சபரிமலை செல்ல  முன்பதிவு செய்துள்ள 560 பெண் பக்தர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்ல கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபாடு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த மாதமும், கடந்த 5ம் தேதியும் வழக்கமான மாதாந்திர பூஜைக்காக கோயில் திறக்கப்பட்டபோது இளம்பெண்கள் சிலர் கோயிலுக்கு செல்ல முற்பட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இதுவரையில் எந்தவொரு இளம்பெண்ணும் சன்னிதானத்துக்குள் நுழைய இயலவில்லை.

 இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு மாதங்களுக்கு நடைபெறும் மகரவிளக்கு மணடல பூஜைக்காக இந்த மாத இறுதியில் நடை திறக்கப்படவுள்ள நிலையில், கோயிலில் வழிபாடு நடத்துவதற்காக 10 முதல் 50 வயது வரையிலான இளம்பெண்கள் 560 பேர் இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளனர்.

அனைத்துவயது பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்கமாட்டோம் என இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதால் சந்நிதிக்குள் செல்ல முடியாமல் நிலக்கல்லில்லும் பம்பாவிலும் பல பெண் பக்தர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மலைப்பாதையில் போராட்டக்காரர்கள் பக்தர்கள் போல் திரண்டு விடுவதால் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் பெண் பக்தர்களை மலைக்கு அழைத்துச் செல்ல கேதர்நாத், வைஷ்ணவதேவி கோவில்களில் பயன்படுத்தப்படுவதைப் போல், ஹெலிகாப்டர்களை இயக்க உள்ளதாக கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close