பெண்கள் பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2000 அபராதம்! ஆந்திரா அட்ராசிட்டி!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 06:14 pm
in-ap-village-wear-nightie-before-sunset-pay-rs-2000-fine

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமல் ஒன்றி பகலில் பெண்கள் நைட்டி அணிந்தால் ரூ. 2000 அபராதமாக வசூலிக்கப்படும் என அதிரடியாக பஞ்சாயத்து தீர்ப்பு உத்தரவிட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேக்கலப்பள்ளி கிராமத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டி அணிந்தபடி பெண்கள் ஊருக்குள் வலம் வருவது கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல என அந்த ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்தில் பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி பெண்கள் பலர் பகலில் நைட்டியுடன் வலம் வருவதால் ஊர் மக்களுக்கு கிராம பஞ்சாயத்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நைட்டியுடன் நடமாடும் பெண்களுக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

முன்னதாக இந்த கிராமத்தில் ஆண்கள் மது குடிக்க கூடாது என்ற சட்டமும் போடப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது ஊருக்குள் மது குடித்து வந்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மது அருந்தியவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும்  அறிவிப்பு வெளியிட்டப்பட்டது


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close