தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார்- ராகுல் காந்தி

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Nov, 2018 07:24 pm
pm-modi-waived-loans-for-15-richest-people-but-not-farmers

பிரதமர் மோடி வெறும் 15 தொழிலதிபர்களுக்கு மட்டும் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலத்தில் வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சராமா பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பிரச்சாரத்தில் பேசிய ராகுல்காந்தி,காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக குறைக்கப்படும். அதேபோல், விவசாயிகளுக்கான மின்கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி, 15 பணக்கார தொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார், விவசாயிகளுக்கு இதுவரை 1 ரூபாயை கூட பிரதமர் மோடி தள்ளுபடி செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close