வாரணாசி வளர்ச்சி திட்டங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 01:35 pm
varanasi-growth-plans-to-make-big-changes-pm-modi

வாரணாசியில் நாளை திறக்கப்படவுள்ள வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் காசி மற்றும் பூர்வான்சலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள  ரிங் சாலை மற்றும் பாபாத் பர்பூர் விமான நிலைய சாலையை  பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். மேலும், கங்கை ஆற்றின் கரையில் உள்ள உள்நாட்டு நீர்வழி முனையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காசி நகரில் உள்ள இந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் நகரத்திலும், உத்திரபிரதேசத்திலும் குறிப்பாக பூர்வான்சலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close