புனேவில் எச்சில் துப்பினால் என்ன தண்டனை தெரியுமா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Nov, 2018 05:54 pm
if-you-spit-on-pune-streets-be-prepared-to-clean-up-the-mess-too

புனேவில், சாலைகளில் எச்சில் துப்புவோர்களை பிடித்து அவர்களையே சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனையை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை தூய்மையாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளில் அந்த மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலைகளில் எச்சில் துப்புவோர்களை பிடித்து அவர்களையே சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனையை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. முன்னதாக சாலைகளில் இதுபோன்று அசுத்தம் செய்பவர்களுக்கு 150 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது. ஆனால் பொதுமக்கள் பின்பற்றாத காரணத்தினால் அவர்கள் அசுத்தம் செய்ததை அவர்களே சுத்தம் படுத்த செய்யும் நூதன தண்டனையை வழங்கியுள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டு 156 பேர் பிடிபட்டுள்ளனர். சாலைகளையும் நம் வீடுகள் போன்று வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தகைய தண்டனை வழங்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close