சீக்கியர்கள் புனித நூலை அவமதித்த வழக்கு: நடிகர் அக்‌ஷய் குமாருக்கு சம்மன்

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 02:55 pm
akshay-kumar-badals-summoned-in-connection-with-punjab-sacrilege-cases

சீக்கியர்களின் புனிதநூலை அவமதித்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் அக்சய் குமாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. 

சர்ச்சைக்குரிய சாமியார் ராம் ரஹீம் நடித்த எம்.எஸ்.ஜி. படம் ரிலீசாவதில் பிரச்னை எழுந்தது. அப்போது பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல், ராம் ரஹீம் இடையேயான சந்திப்புக்கு அக்ஷய் குமார் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்பட்டது. இதை அடுத்து சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் போல் ஆடை அணிந்த சர்ச்சையில் ராம் ரஹீமுக்கு சீக்கிய குருக்கள் மன்னிப்பு வழங்கினர்.

இதகைளடுத்து சீக்கிய புனித நூல் அவமதிப்புச் சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, நடிகர் அக்ஷய் குமாரை 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close