ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 16 நாள் சுற்றுலா:14ஆம் தேதி தொடக்கம்

  டேவிட்   | Last Modified : 12 Nov, 2018 08:13 pm
shri-ramayana-express-starts-on-14th

அயோத்தியில் இருந்து இலங்கை வரை ஸ்ரீராமரின் வாழ்வோடு தொடர்புடைய இடங்களை தரிசிக்கும் ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் ரெயில் 14-ம் தேதி டெல்லியில் தனது முதல் பயணத்தை தொடங்கவுள்ளது. 

ஸ்ரீராமரின் வாழ்வோடு தொடர்புடைய இடங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் 16 நாள் பக்தி சுற்றுலாவாக செல்லும் ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் என்னும் சிறப்பு ரெயிலை இயக்க இந்திய ரெயில்வே துறை முடிவு செய்திருந்தது.  இந்த சிறப்பு ரெயிலின் முதல் சேவை டெல்லி சப்தார்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் 14ஆம் தேதி அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.
 
சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை சென்று 5 இரவுகள் மற்றும் 6 பகல் அங்கு தங்கி சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணம், உணவு, தங்கும் விடுதி செலவு மற்றும் சென்னையில் இருந்து கொழும்புவுக்கும், கொழும்புவில் இருந்து டெல்லிக்குமான விமான கட்டணம் என  நபர் ஒன்றுக்கு 47 ஆயிரத்து 600 ரூபாய் மொத்த கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை பகுதி சுற்றுலாவையும் சேர்த்து ரூ.62,720  ரூபாயில் இந்த பக்தி சுற்றுலாவில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close