காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறல்; இந்திய வீரர் பலி!

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 10:32 pm
indian-soldier-killed-in-pakistan-firing-at-loc

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லை கோட்டின் அருகே, பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. 

இன்று மாலை சுமார் 5.15 மணியளவில் சர்ச்சைக்குரிய எல்லைக்கோட்டின் அருகேயுள்ள கிருஷ்ணா காட்டி என்ற இடத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து, இந்திய ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்ததாக, பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார்.

"இந்த சம்பவத்தில், துப்பாக்கி குண்டுகள் தாக்கி படுகாயமடைந்த லேன்ஸ் நாயக் ஆண்டனி செபாஸ்டின், உயிரிழந்தார். ஹவில்தார் மாரிமுத்து என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்தவருக்கு உடனடி முதலுதவி வழங்கப்பட்டு, ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இறந்த ஆண்டனி செபாஸ்டியன், கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு ஆனா டயானா ஜோசப் என்ற மனைவி உண்டு. வீரமரணம் அடைந்த அவரது உயிர்தியாகத்திற்கு இந்த நாடு என்றுமே கடமைப்பட்டுள்ளது" என கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறினார். 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமாறு, பாகிஸ்தான் ராணுவத்தின் கண்காணிப்பு சாவடிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close