55 விருதுகளை பெற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்!  

  சுஜாதா   | Last Modified : 13 Nov, 2018 06:15 am
55-awards-presented-to-youth-with-disabilities-at-global-it-challenge-for-youth-with-disabilities-2018

“உடல் திறன் குறைபாடுடைய இளைஞர்களுக்கான சர்வதேச தகவல்தொழில்நுட்ப சவால் 2018”-ல் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு 55 விருதுகள் வழங்கப்பட்டன.

“உடல்திறன் குறைபாடுடைய இளைஞர்களுக்கான சர்வதேச தகவல்தொழில்நுட்ப சவால் 2018” எனப்படும்  மூன்று நாள் நிகழ்ச்சி, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில் நேற்றுடன் நிறைவடைந்தது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை,  கொரியா சர்வதேச மறுவாழ்வு அமைப்பு மற்றும் துணை அமைப்பான எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், 2018 நவம்பர் 9 முதல் 11 வரை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தாவர்சந்த் கெலாட் மற்றும் கொரியா, இந்தியா, மற்றும் எஸ்கேப் நிறுவனத்தினர் இந்த விருதுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், இந்த ஆண்டு, இந்தியா, இந்தோனேசியா, சீனா, வியட்நாம், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மங்கோலியா, கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், கொரியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 18 நாடுகளைச் சேர்ந்த  மாற்றுத் திறனாளி இளைஞர்கள் (கண் பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, அறிவாற்றல் குறைபாடு/வளர்ச்சிக் குறைபாடு)96 பேர் கலந்துகொண்டனர்.  

சிறந்த தன்னார்வலர்  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 55 விருதுகள் கொண்டதாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  பார்வைத்திறன், செவித்திறன், உடல் மற்றும் வளர்ச்சி/அறிவுத்திறன் குறைபாடு ஆகிய பிரிவுகளில்,  “மிகச்சிறந்த, தலைசிறந்த மற்றும் சிறப்பான” என்று ஒவ்வொரு பிரிவிலும் தனிநபர் மற்றும் குழுக்களுக்கு தலா மூன்று விருதுகள் வழங்கப்பட்டன. பார்வைத்திறன் குறைபாடு பிரிவில், இந்தியாவின் மஞ்சித் சிங், மின்னணு சாதன சவால் மற்றும் மின்னணு வாழ்வியல் வரைபட சவால் போட்டியிலும், மற்றொரு இந்தியரான சவுரவ் குமார் சின்ஹா  சுப்பர் சேலஞ்சர் விருதையும் வென்றனர்.  “சர்வதேச தகவல்தொழில்நுட்ப முன்னோடி விருது” இந்தோனேஷியாவைச் சேர்ந்த  ஃபைசா புத்ரி-க்கு வழங்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close