கருத்தரிப்பு விகிதத்தில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 06:46 am
fertility-rates-in-indian-states-and-their-meaning

சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கருத்தரிப்பு விதம் குறித்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் சராசரியாக ஒரு பெண் 2.3 முறை கருத்தரிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விகிதம் ஒவ்வொரு மாநிலங்களை ஒப்பிடும்போது, பெருமளவு மாறுபடுகிறது. முக்கியமாக இந்தி மொழி பேசும் பெரிய மாநிலங்களை விட, வேறு மொழி பேசும் மாநிலங்களில், கருத்தரிப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. இந்திய அரசின் ஆய்வு நிறுவனமான நிட்டி ஆயோக் 2016ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண்களின் கருத்தரிப்பு வீதம் 3க்கும் மேலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த விகிதம் குறைவாக உள்ளது. ஜனத்தொகையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருக்க தேவைப்படும் ரீப்ளேஸ்மெண்ட் லெவல் எனப்படும் கருத்தரிப்பு விகிதத்தை விட, மேற்கண்ட மாநிலங்களின் கருத்தரிப்பு வீதம் குறைவாக உள்ளது. சர்வதேச அளவில் இந்த ரீப்ளேஸ்மெண்ட் லெவல் கருத்தரிப்பு விகிதம் 2.1 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் சராசரியாக 2.3 விதமாக உள்ளது.

ஆனால், தமிழகம், மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இது 1.6 என மிகவும் குறைவாக உள்ளது. ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளுக்கு இணையான கருத்தரிப்பு விகிதம் ஆகும். இந்த மாநிலங்கள் போக, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் கருத்தரிப்பு வீதம் குறைவாகவே உள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில் அதிகபட்சமாக, பாகிஸ்தானில் கருத்தரிப்பு வீதம் 3.3 சதவீதமாக உள்ளது.

தென் மாநிலங்களில் கருத்தரிப்பு வீதம் குறைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக எந்த மாநிலங்களில் வளர்ச்சி அதிகமாக உள்ளதோ, அந்த மாநிலங்களில் கருத்தரிப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழகம், கேரளாவை போன்ற மாநிலங்கள், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்ற மாநிலங்களை விட முன்னேற்றம் அடைந்துள்ளதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் அதிக வருமானம் பெறும் மக்களை கொண்ட நாடுகளிலேயே கருத்தரிப்பு விகிதம் குறைவாக இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற குறைவான கருத்தரிப்பு வீதம் இருப்பது, ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close