பொய் பேசவில்லை - ராகுலுக்கு டஸால்ட் தலைமை அதிகாரி பதிலடி

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 12:31 pm
dassault-ceo-interview-to-ani-news-agency

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் நான் பொய் கூறவில்லை. என்னுடைய பொறுப்பில் இருக்கின்ற எவரும் பொய் பேச மாட்டார்கள் என்று டஸால்ட் நிறுவன தலைமை அதிகாரி எரிக் ட்ராப்பியர் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கான பதிலடியாகக் கருதப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காப்பாற்றும் வகையில் எரிக் ட்ராப்பியர் பொய் பேசி வருவதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வந்தார்.

மேலும், மோடி தலையிட்டதால்தான், ரஃபேல் சார்ந்த துணை ஒப்பந்தம் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி வலியுறுத்தி வந்தார் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ஏ.என்.ஐ. என்ற செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் ட்ராப்பியர் கூறியுள்ளதாவது:

நான் பொய் பேசம் அவசியம் எனக்குக் கிடையாது என்னைப் போன்ற பொறுப்பில் உள்ளவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது.. நான் இதுவரை வெளியிட்டுள்ள தகவல்களும், அறிக்கைகளும் உண்மையானவை. பொய் சொல்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என்னப்போன்று, ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும் எவரும் பொய் பேசமாட்டார்கள். 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களாகத்தான் தேர்வு செய்தோம். ஏற்கனவே இதுபோன்று 30 நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.  தங்களது நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தி அதில் உச்ச நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த ஒப்பந்தத்தை இந்திய  அரசு மேற்கொண்டுள்ளது. 

தனியொரு ரிலையன்ஸ் நிறுவனத்தில் நாங்கள் பணத்தை முதலீடு செய்யவில்லை. டஸால்ட் - ரிலையன்ஸ் ஆகிய கூட்டு திட்டங்களுக்காத்தான் அந்தப் பணம் செலவிடப்படும். ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் டஸால்ட் நிறுவனத்தின் பொறியாளர்களும், பணியாளர்களும்தான் முதன்மையான பணிகளை மேற்கொள்வர் என்று எரிக் ட்ராப்பியர் அறிவித்துள்ளார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close