திருநங்கைகளுக்கு எதிரான வன்கொடுமை: உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது?

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 12:37 pm
make-rape-law-gender-neutral-says-supreme-court-puts-onus-on-centre-parliament-to-frame-laws

திருநங்கைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் தண்டனைக்குரியது என கூற முடியாது, இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சட்டப்பிரிவு 375ன் படி, பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தண்டனைக்குரியது. இந்த சட்டத்தில், அனைத்து பாலினத்தவரையும் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை குற்றமாக கருதி, அதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையில், இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவிக்கப்ட்டுள்ளது. பதிலாக, நாடாளுமன்றத்தில் திருநங்கைகளின் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு சட்டம் இயற்றப்பட்டோ அல்லது ஏற்கனவே உள்ள சட்டத்தை திருத்தியோ இந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close