அட்டர்னி ஜெனரலின் வேண்டுகோளை ஏற்ற உச்ச நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 03:33 pm
cji-ranjan-gogoi-dismisses-case-reverses-decision-after-upset-attorney-general-s-outburst

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்  பெரும்பாலான மனுக்கள் விசாரணை செய்யப்படாமலே தள்ளுபடி செய்யப்படுகின்றன என அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் குற்றச்சாட்டையடுத்து, ராஜஸ்தான் மாநில அரசு தொடர்பான அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது உச்ச நீதிமன்றம். 

ராஜஸ்தான் மாநில அரசு தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வரவிருந்தது. இதற்காக அட்டர்னி ஜெனரல் வேணு கோபால் நீதிமன்றத்திற்கு நேரில் வந்தார். இந்நிலையில், வழக்கை விசாரிக்காமலேயே வழக்கினை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். 

இதன்பின்னர் வேணுகோபால் தலைமை நீதிபதியிடம், "மக்கள், மைல் கணக்கில் பயணம் செய்து உச்ச நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஆனால், பெரும்பாலான மனுக்கள் விசாரணை செய்யப்படாமலேயே தள்ளுபடி செய்யப்படுகிறது. இது சரியல்ல. மாறாக, அனைத்து மனுக்கள் மீதும் ஒருமுறையாவது அதாவது முதல்கட்ட விசாரணையாவது நடத்தப்பட வேண்டும். அனைத்து மனுக்களையும் பாரபட்சமில்லாமல் விசாரிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு தொடர்பான மனுவை ஏற்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. விரைவில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close