சிக்குன்குனியாவை குணப்படுத்தும் புளியங்கொட்டை! - ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 03:52 pm

tamarind-can-protect-against-chikungunya-find-iit-researchers

உத்தரகாண்ட் மாநில ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், சிக்குன்குனியாவை குணப்படுத்தும் இயற்கை மருந்தை கண்டுபிடித்துள்ளனர். 

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தேசிய பல்கலைக்கழக பேராசியர்களாகளான ஷாய்லி தோமர் மற்றும் பிரவீந்திர குமார் ஆகியோர் சிக்குன்குனியா வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக பலர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

இந்த நேரத்தில், தங்களின் ஆராய்ச்சியின் மூலமாக சிக்குன்குனியா நோயினை புளியங்கொட்டையின் மூலமாக குணப்படுத்த இயலும் என்று கண்டறிந்துள்ளனர். இவர்கள் இந்த ஆராய்ச்சிக்கு காப்புரிமையும் செய்துள்ளனர். மேலும், அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இதில் பல்வேறு வகையான மருத்துவக்குணங்கள் அடங்கியுள்ளன. அதன்படி, புளியமரத்தின் வேர்பட்டைகள், புளியம்பழம், புளியம்பழத்தின் கொட்டைகள் மற்றும் புளிய மரத்தின் இலைகளில் உள்ள மருத்துவ குணத்தால் வயிற்றுப்போக்கு, அடிவயிற்று வலி, மலச்சிக்கல் உள்ளிட்டவற்றை குணப்படுத்தும் எனவும் அவர்களது ஆராய்ச்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், புளியங்கொட்டையில் உள்ள லெக்டின் என்னும் புரதச்சத்து, உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழித்து, நமது உயிரணுக்களை பாதுகாக்கிறது. இதன் மூலமாக, சிக்குன்குனியா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த லெக்டினை பயன்படுத்தி இந்த நோய்க்கான சிகிச்சை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.