வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-29!

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 05:58 pm
gsat-29-launched-successfully-from-sriharikota

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் கிரையோஜெனிக் எஞ்சினை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் III ராக்கெட், ஜிசாட்-29 செயற்கைகோளுடன் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோவின்  தயாரிப்புகளிலேயே அதிக எடை கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் III ராக்கெட், மாலை 5.08 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டைவில் உள்ள சதீஷ் ஜவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சுமார் 143 அடி உயரமுள்ள இந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட், 640 எடை கொண்டதாகும். ஜிசாட்-29 தொலைத்தொடர்பு செயற்கைகோளை, இந்த ராக்கெட் விண்ணில் நிறுத்தியது.  

3,423 கிலோ எடை கொண்ட ஜிசாட் செயற்கைகோள், நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகள் மோசமாக உள்ள பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவைகளை கொண்டு செல்லுமாம். வெறும் 16 நிமிடங்களில், பூமியில் இருந்து சுமார் 207 கிமீ உயரத்தில் ஜிசாட் ராக்கெட்டை நிறுத்தியுள்ளது. இன்று காலை 5.08 மணியளவில் ஏவப்பட்ட இருந்த செயற்கைகோள், கஜா புயல் காரணமாக மோசமா வானிலை இருந்ததால், மாலை ஏவப்பட்டுள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close