நிதி ஆயோக்கின் அடல் கண்டுபிடிப்பு இயக்கம் மற்றும் யுனிசெப் இளம் சாம்பியன் விருது அறிவிப்பு!

  சுஜாதா   | Last Modified : 15 Nov, 2018 11:13 am
niti-aayog-s-atal-innovation-mission-and-unicef-announce-young-champions-awards

திடமான வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் இந்தியாவின் குழந்தைகளுக்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்க குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நிதி ஆயோக்கின் அடல் கண்டுபிடிப்பு இயக்கமும், யுனிசெப்பும் இணைந்துள்ளது.

தேசிய குழந்தைகள் தினத்தில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டாடும் வகையில் யுனிசெப்-அடல் டிங்கரிங் பரிசோதனைச்சாலை இளம் சாம்பியன்கள் விருதை நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமாரும், ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் இந்திய பிரதிநிதி யூரி அஃப்னாசேவும் அறிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அடல் கண்டுபிடிப்பு இயக்கத்தின் இயக்குனர்  ராமநாதன் ரமணன் மற்றும் யுனிசெப்பின் தலைமை செயல்பாட்டு அதிகாரி லாரா செய்கிரிஸ்ட் பாஷேவும் பங்கேற்றனர்.

அடல் டிங்கரிங் மாராத்தான் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட சிறந்த 6 போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிக்காக நாடு முழுவதிலுமிருந்து 650 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 30 புதிய கண்டுபிடிப்புகள் கண்டறியப்பட்டன. இந்த புதிய கண்டுபிடிப்புகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில் பெரிய அளவில் இயக்கத்தை கொண்டு வருவதின் அடையாளமாக மாறி வருகின்றன.
அடல் கண்டுபிடிப்பு இயக்கம் யுனிசெப்புடன் இணைந்து 14 நவம்பர் முதல் 17 நவம்பர் வரை டிங்கரிங் ஹாக்கத்தான் என்ற போட்டியை நடத்த உள்ளது. இதில் தரமான கல்வி மற்றும் பள்ளிகளில் பாதுகாப்பு தொடர்பான சவால்களுக்கு புதிய தீர்வுகளை குழந்தைகள் அளிக்க உள்ளனர். இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் உலக குழந்தைகள் தினமான நவம்பர் 20, 2018 அன்று அறிவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close