ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தால் விமான நிலையத்தில் முடக்கப்பட்ட திருப்தி தேசாய் - யார் இவர்? எதனால் தடுக்கப்பட்டார்?

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2018 10:27 am
women-activist-trupti-desai-set-to-go-sabarimala-tomorrow-held-captive-in-airport

பெண்ணிய ஆர்வலர் திருப்தி தேசாய், தனது பெண் சகாக்கள் 6 பேருடன் இன்று காலை கேரள மாநிலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு ஐயப்ப பக்தர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருவதால் 4 மணி நேரத்துக்கும் மேலாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் அவர்கள் உள்ளேயே முடங்கியுள்ளனர். திருப்தி தேசாய் யார்? அவர் எதற்காக கேரளா வந்தார் என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது இச்செய்தி.

திருப்தி தேசாய் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். பூமிமாதா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள பிரபல சனி சிக்னாப்பூர் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி கிடையாது. ஆனால், அக்கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு நீதிமன்றம் மூலமாக அனுமதி பெற்று, அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் திருப்தி தேசாய். இந்த முறை அவரது கவனம் ஐயப்பன் கோயில் பக்கம் திரும்பியுள்ளது.

தனது பெண் சகாக்கள் 6 பேருடன் நாளை காலையில் ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த திருப்தி தேசாய் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி, அவர்கள் அனைவரும் இன்று காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். ஆனால், விமான நிலையத்துக்கு வெளியே பெருவாரியான ஐயப்ப பக்தர்கள், சரண கோஷம் பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 4 மணி நேரத்துக்கும் மேலாக விமான நிலையத்துக்குள்ளேயே அவர்கள் முடங்கியுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், போராட்டங்களை முறியடித்து நாளை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு திருப்தி தேசாய் செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், தன் மீது தாக்குதல் நடத்தினாலும், கோயிலுக்குச் செல்லும் முயற்சியை கைவிடப் போவதில்லை என்கிறார் அவர். தனக்கு என்ன நேர்ந்தாலும் கேரள அரசுதான் பொறுப்பு என்றார் திருப்தி தேசாய்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close