காங்கிரஸுக்கு மோடி சவால்!

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2018 01:58 pm
modi-challenge-to-congress

காங்கிரஸ் கட்சி சாராத ஒருவர் அக்கட்சியின் தலைவராக தொடர்ந்து 5 வருடங்கள் நீடித்தால், நேரு ஒரு உண்மையான ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளார் என நான் நம்புகிறேன் என பிரதமர் மோடி சத்தீஸ்கரில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 12ம் தேதி முதல்கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், வருகிற 20ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் களைகாட்டியுள்ளன. 

பிரதமர் நரேந்திர மோடி இன்று சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், "இங்கு கூடியிருக்கும் சத்தீஸ்கர் மாநில மக்களை பார்க்கும் போது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் உங்கள் முன்னிலையில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். இந்த சந்தோஷ ஆரவாரமே இம்மாநிலத்தில் பா.ஜ.க மீதுள்ள உங்களின் ஆதரவை காட்டுகிறது. என் மீது வைத்துள்ள அன்புக்கு மிக்க நன்றி" என பேசினார். 

தொடர்ந்து, 'விடுதலை அடைந்த காலத்தில் இருந்து இந்தியாவை காங்கிரஸ் தான் ஆண்டு வந்தது. ஆனால் மக்களுக்கு என்ன செய்தது? காந்தி குடும்பத்தினர் சாராத ஒருவர் அக்கட்சியின் தலைவராக ஆக முடியுமா? அவ்வாறு காங்கிரஸ் கட்சி சாராத ஒருவர் அக்கட்சியின் தலைவராக தொடர்ந்து 5 வருடங்கள் நீடித்தால் நான், நேரு ஜி ஒரு வலிமை மிக்க உண்மையான ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளார் என நம்புகிறேன்' என பிரதமர் மோடி சவால் விட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close