சபரிமலையில் கலங்கடித்த பக்தர்கள்... வீடு திரும்பும் திருப்தி தேசாய்! 

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Nov, 2018 06:39 pm
trupti-desai-to-return-to-her-hometown-pune-tonight

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுவிடவேண்டும் என பிடிவாதமாக களமிறங்கிய திருப்தியை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் நடத்திய போராட்டத்தால் தனது சொந்த ஊரான புனேவுக்கு இன்று இரவு செல்ல தயாரானார்.  

பெண்ணிய ஆர்வலர் திருப்தி தேசாய், தனது பெண் சகாக்கள் 6 பேருடன் நாளை காலையில் ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த திருப்தி தேசாய் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி, அவர்கள் அனைவரும் இன்று காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு விமான நிலையத்துக்கு வெளியே பெருவாரியான ஐயப்ப பக்தர்கள், சரண கோஷம் பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐயப்ப பக்தர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் 4 மணி நேரத்துக்கும் மேலாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் அவர்கள் உள்ளேயே முடங்கினார். அதன்பின் மிகுந்த போராட்டத்திற்கு பின் வெளியே வந்த அவர், அங்கிருந்த ஆட்டோ, டாக்ஸிக்களை நிலக்கலுக்கு அழைத்துள்ளார். ஆனால் அங்கிருப்பவர்கள் ஐயப்ப பக்தர்கள், ஆகையால் திருப்தியை அழைத்து செல்ல ஒருவரும் முன்வரவில்லை. இதற்கிடையே மக்களின் கருத்துக்கு மதிப்பு தரவேண்டும் என போராடிய திருப்தி, விமான நிலையத்தில் அந்த மனிதர்களின் உணர்வை மதித்து திரும்பி செல்லவேண்டும் தானே? தன் மீது தாக்குதல் நடத்தினாலும், கோயிலுக்குச் செல்லும் முயற்சியை கைவிடப் போவதில்லை என சொன்ன அவருக்கு, பக்தர்களின் கடும் எதிர்ப்பை மீறி என்ன செய்வதென்று விழி பிதுங்கிய அவர், இன்று இரவு தனது சொந்த ஊரான புனேவுக்கே செல்ல முடிவெடுத்துள்ளார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close