மாலத்தீவு புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

  டேவிட்   | Last Modified : 17 Nov, 2018 03:17 pm
pm-modi-greets-the-new-president-of-maldives

மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்து தெரிவிக்கவுள்ளார். 

மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில்,  எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து தலைநகர் மாலேவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், புதிய அதிபராக இன்று அவர் பதவி ஏற்கிறார். 

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்தள்ளார்.  அதற்காக இன்று அவர் மாலத்தீவு புறப்பட்டு செல்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மாலத்தீவின் புதிய அதிபராக இன்று பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் எனவும், மாலத்தீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது எனவும் பதிவிட்டுள்ளார். 
மேலும்,  மாலத்தீவில் நிலையான ஜனநாயகம், அமைதி நிலவ வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும், தங்களது பணியை திறம்பட ஆற்றும்படி வாழ்த்துகிறேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு தற்போது தான் மோடி முதன்முறையாக மாலத்தீவு செல்கிறார்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close