மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

  டேவிட்   | Last Modified : 18 Nov, 2018 01:20 am
pm-modi-greets-new-president-of-maldives

மாலத்தீவின் புதிய அதிபரான இப்ராகிம் மொகமது சாலிக் பதவியேற்பு விழாவில் நேரில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து புதிய அதிபராக நேற்று அவர் பதவியேற்றார்.

தலைநகர் மாலேவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய அதிபராக பதவியேற்ற இப்ராகிம் மொகமது சாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,  மாலத்தீவின் புதிய அதிபராக பதவி ஏற்றிருக்கும் சாலிக்குக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மாலத்தீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. தங்களது பணியை திறம்பட ஆற்றும்படி வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close