கேரளம்: நெடுஞ்சாலைகளில் பா.ஜ.க. மறியல்

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2018 11:56 am
kerala-bjp-blocked-highways

சபரிமலைக்குச் சென்ற கேரள பா.ஜ.க. பொதுச்செயலாளர் சுரேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைகளில் அக்கட்சி மறியல் போராட்டம் நடத்தி வருகிறது.

சுரேந்திரன் கைது செய்யப்பட்டதற்கு மாநில பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”கேரளாவில் காட்டாட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் திமிராகவும், நியாயமற்ற வகையிலும் செயல்பட்டு வருகிறார். சபரிமலை விவகாரத்தால் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது அவர்தான். இதை எதிர்த்து நாங்கள் போராடுவோம்’’என்றார்.

திருவாலா என்ற இடத்தில் 150க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நெடுஞ்சாலைகளை மறித்து அக்கட்சியினர் போராடி வருகின்றனர். முன்னதாக, சுரேந்திரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாநில தலைமைச்செயலகம் முன்பாக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து காவல்துறை கலைந்து போகச் செய்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close