ஊர்சுற்றிவிட்டு, பின் காதலர் மீது பாலியல் புகார் அளிக்கிறார்கள் - ஹரியானா முதல்வர் சர்ச்சை

  ஐஸ்வர்யா   | Last Modified : 18 Nov, 2018 08:39 pm
haryana-cm-khattar-sparks-controversy-with-rape-remark

காதலர்களுடன் பல நாட்கள் ஊர் சுற்றும் பெண்கள், சண்டைப்போட்டு பிரிந்த பின்பே, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாரளிப்பதாக ஹரியானா முதலமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் பலாத்கார சம்பவங்களும் அது தொடர்பான வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றன. 2014-ல், பெண்கள், ஆபாசமாக ஆடையணிவதால்தான் பலாத்காரங்கள் நடப்பதாகவும், சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பும் பெண்கள் ஆடையின்றி அலையலாமே எனவும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார் கட்டார்.

இந்நிலையில், நேற்று பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “அதிக அளவு பலாத்கார வழக்குகள் பதிவாவதற்குக் காரணம், பெண்கள் அவர்களின் முன்னாள் காதலர்களை பழி தீர்க்க எண்ணுவதால் தான். 80-90 சதவீதம் பாலியல் வன்கொடுமை வழக்குகளில், ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர். இருவரும் சேர்ந்து பல நாட்கள் நன்றாக ஊர் சுற்றிவிட்டு, ஒரு நாள் சண்டை ஏற்பட்டு பிரியும்போதுதான், பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்” என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close