சபரிமலைக்கு ஆய்வு மேற்கொள்ள செல்கிறார் மத்திய அமைச்சர் அல்போன்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2018 08:28 pm
central-minister-kj-alphons-to-visit-sabarimala

சபரிமலை விவகாரத்தில் கேரள பாரதிய ஜனதா நெடுஞ்சாலைகளை முடக்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர் கே ஜே அல்போன்ஸ் ஆய்வு மேற்கொள்வதற்காக நாளை சபரிமலை செல்ல இருக்கிறார்

சபரிமலைக்குள் அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வந்தனர். சீசன் துவங்கியுள்ள நிலையில் கட்சியின் மூத்த தலைவர் சுரேந்திரன் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்றார். ஆனால், போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதால், அரசியல் தலைவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என போலீசார் கூறினர். காவல்துறையினரை மீறி செல்ல முயற்சித்தால், அவர்  கைது செய்யப்பட்டார். நேற்று இரவு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சுரேந்திரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கேரளாவில் நெடுஞ்சாலைகளை மறித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த பதற்றமான சூழ்நிலையில் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் கே ஜே அல்போன்ஸ் நாளை சபரிமலை செல்ல இருக்கிறார். கடந்த முறை சபரிமலைக்கு சென்றபோது சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியதாகவும், அது குறித்து பார்வையிட செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "நான் சபரிமலைக்கு இரண்டு மாதங்களுக்கு முன் சென்று இருந்தேன் அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மோசமாக காட்சியளித்தது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பயணத்தை எளிமையாக, பல்வேறு மாற்றங்களை செய்ய நான் அறிவுறுத்தினேன்" என்று கூறினார்.

நேற்று இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் கே பி சசிகலா, சபரிமலை சன்னிதானத்துக்கு செல்ல முயன்றபோது, போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ், "கேரள அரசு தனது பதவிக்காலம் ஐந்தாண்டுகள் மட்டும் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என எச்சரித்துள்ளார்.

ஐம்பது வயதுக்கு மேலான கே.பி சசிகலா, சபரிமலைக்கு பிரார்த்தனை செய்வதற்காக செல்வதாக கூறி இருந்தார். ஆனால் ஏற்கனவே இரண்டு முறை அவர் சபரிமலைக்கு சென்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், அவரை தடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close