சபரிமலை: நள்ளிரவில் 80க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது

  டேவிட்   | Last Modified : 19 Nov, 2018 09:05 am
more-than-80-devotees-arrested-in-sabarimala

சபரிமலையில் நேற்று நள்ளிரவில் ஐயப்ப பக்தர்கள் 80 பேரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து வெளியேற்றி உள்ளனர்.

அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 18ஆம் படிக்கு அருகே நடைபந்தல் பகுதியில் பக்தர்கள் சிலர் தங்க முயற்சித்ததால்,  போலீசார் அவர்களை வெளியேறும்படி அறிவுறுத்தினர்.

போலீசாரின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து அவர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, வெளியேற்றினர். இது குறித்து மலப்புரம் எஸ்.பி., சதீஷ்குமார் தெரிவிக்கையில், போலீசார் பக்தர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சன்னிதானம் பகுதியில் 144 தடை அமலில் உள்ள நிலையில் அவர்கள் அங்கு தங்க முற்பட்டதால், வேறு வழியின்றி அவர்களை கைது செய்ததாகவும், ஹரிவராசனம் பாடப்பட்ட பிறகு அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.  

பக்தர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அதிக அளவிலான பாரதிய ஜனதா, மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வீடு, கொச்சி, கொல்லம், ஆலப்புழா, தொடுபுழா, மலப்புரம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close