முசாபர்பூர் காப்பகத்தில் 5 சிறுமிகள் பலி

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 08:37 pm
muzaffarpur-shelter-home-deaths-5-girls-dead-not-two

பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில், 2 சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததாக சிபிஐ நடத்தி வந்த விசாரணையில், மேலும் 3 சிறுமிகள் பலியானது தற்போது தெரியவந்துள்ளது.

முசாபர்பூரில் நடத்தப்பட்டு வந்த ஒரு தனியார் காப்பகத்தில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், அங்கு தங்கியிருந்த 42 சிறுமிகளில் 34 பேர் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து இந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்தது. அப்போது அந்த காப்பகத்தில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் பலியானதாக தெரியவந்துள்ளது. தற்போது இறந்தது 5 சிறுமிகள் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

 அங்கு உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், ஐந்து சிறுமிகளின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2013ல் இரண்டு சிறுமிகள், 2015ல் இரண்டு சிறுமிகள், 2017ல் ஒரு சிறுமியின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாம்.

தற்போது இறந்தவர்களின் உடல்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது, என்பது குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காப்பகத்தை நடத்தி வந்த பிரஜேஷ் தாகூர்  என்ற தொழிலதிபர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close