கஜா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் தமிழகத்துடன் கேரளா துணை நிற்கும்: பினராயி விஜயன்

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 10:02 am
pinarayi-vijayan-tweets-about-gaja

கஜா புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்களுடன் கேரளா துணை நிற்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே அழிந்துள்ளது. தற்போது நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், "கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துக்கொண்டு இருக்கும் தமிழக மக்களுடன் கேரளா துணை நிற்கும்.

 

பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு குடிநீர், தார்பாய்கள், மெழுகுவர்த்திகள், உலர்ந்த உணவு பொருட்கள், துணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை கேரள பேரிடர் மேலாண்மை வாரியம் கண்காணிக்கும்" என தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close